காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோட்டைப்பட்டினம் அருகே கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வண்ணிச்சிப்பட்டினம் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில், கட்சி கொடியுடன் கடலில் இறங்கி 5 மணி வரை ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம்

அப்போது தமிழக மக்களை காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் ஒலி முகமது, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் செய்யது முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

Next Story