கூட்டுறவு சங்க தேர்தல் மனு தாக்கலை தடுக்க முயற்சி: அ.ம.மு.க.வினர் மறியல்
காரியாபட்டியில் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் மனு தாக்கலின் போது அ.ம.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் விஜயன் தலைமையில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அ.ம.மு.க. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கே.கே.சிவசாமி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன், நகர செயலாளர் சந்துரு ஆகியோரும் ஏராளமானவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அ.தி.மு.க.வினர் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது.
தகவல் அறித்து அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தனபாலன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். பின்பு கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் இருந்தவர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு அ.ம.மு.க. வினரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர். ஆனால் தேர்தல் அலுவலர் மகாலிங்கம் சங்க அலுவலகத்தில் இல்லை.
தேர்தல் அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அது அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இரு தரப்பினரும் கோஷ்டியாக நின்று கொண்டிருந்த போது தேர்தலை நிறுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story