ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். கருப்பி, நேருஜி, அந்தோணிராஜ், சென்றாயப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் முனியசாமி வரவேற்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பணியாற்றி வரும் தினக்கூலி துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.624 குறைந்த பட்ச ஊதிய அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.இந்த காத்திருப்பு போராட்டத்தில் உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக கதவை பூட்டி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story