தலித்துகள் மீதான வன்முறையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

தலித்துகள் மீதான வன்முறையை கண்டித்து கோவையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
தலித்துகள் மீதான வன்முறையை கண்டித்தும், தலித் மற்றும் பழங்குடியினரின் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நேற்று கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மூத்த தலைவர் சுப்பு காமராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ம.தி.மு.க.வை சார்ந்த தியாகராஜன், கிருஷ்ணசாமி, நந்தகோபால், முருகேசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
1989-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவும், பாதுகாப்பு அளிக்கவும் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளித்தது. சமீபகாலமாக தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தாக்குதல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
வன்கொடுமை சட்டத்தை வலு இல்லாமல் ஆக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதற்காக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணகுமார், ஹேமா ஜெயசீலன், கே.பி.எஸ். மணி, கணபதி சிவக்குமார், செல்வராஜ், பச்சைமுத்து, ராமசாமி, கிருஷ்ணசாமி, ராஜாமணி, துளசிராஜ், சவுந்தர்குமார், லாலிரோடு செல்வம், போஸ், ராம்கி, காயத்ரி, உமா மகேஸ்வரி, திலகவதி, வக்கீல் கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருமத்தம்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் எம்.என்.கந்தசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் வி.எம்.சி.மனோகரன் பேசும்போது, பன்முக தன்மை கொண்ட இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. முன்னேற்ற திட்டங்கள் எதுவும் இல்லாமல் மக்களை மத்திய அரசு முடங்குகிறது. விவசாயம் தொழில்துறை குறித்து பிரதமர் மோடிக்கு எந்தவித அக்கறையும் இல்லை. தொழில் வர்த்தக ரீதியாக இந்தியா பின்னோக்கி சென்றுவிட்டது, என்றி கூறினார்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சவுந்தர்ராஜ், எம்.சின்னராஜ், வி.விஜயகுமார், பி.ஆர். ரங்கராஜ், கே.ஆர். ஜெகநாதன், ஜி.வி.நவீன்குமார், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், வி.எம்.ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்

Related Tags :
Next Story