குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும், பொதுமக்கள் மனு
குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆவலப்பம்பட்டி பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆவலப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் தென்னை விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை.
இதன் காரணமாக மரங்களை வெட்டி வீழ்த்த கூடிய சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். விவசாயத்தை சார்ந்த தொழில்களான கோழி பண்ணை, ஆடுகள், மாடுகள் வளர்ப்பு போன்றவற்றிற்கு தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் குடிநீருக்கு கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்படும்.எனவே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கிணறுகளில் அவர்களின் தேவைக்கு போக மீதமுள்ள தண்ணீரை லாரிகள் மூலமாக எடுத்து சென்று அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.
மேற்கண்ட கிணறுகளில் தண்ணீர் இல்லையென்றால் நாங்கள் குடிநீருக்கும், ஆடு, மாடுகள் போன்றவை வளர்ப்பதற்கும், காய்ந்து போன மீதமுள்ள தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல் போய் விடும். எனவே ஆவலம்பட்டி கிராமத்தில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story