விதிமீறல்கள் மறைக்கப்படுவதால் பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்தால் உயிர் சேதங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு


விதிமீறல்கள் மறைக்கப்படுவதால் பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்தால் உயிர் சேதங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2018 4:00 AM IST (Updated: 14 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலைகளில் உள்ள விதிமீறல்கள் மறைக்கப்படுவதால் அதன் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு தொடர் உயிர்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

சிவகாசி,

மாவட்டத்தில் 800–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பட்டாசு உற்பத்தி தொழிலில் மட்டும் 5 லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பட்டாசு விற்பனைக்கு சில மாநிலங்களில் பிரச்சினை இருந்து வந்த போதும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்கு இடையே பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 இந்தநிலையில் கடந்தவாரம் சிவகாசி அருகே 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்களில் பலர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த வெடி விபத்துக்களை தொடர்ந்து பட்டாசு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மத்தியிலும், உற்பத்தியாளர்கள் மத்தியிலும் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

கடந்த வாரம் நடத்த பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் இதுவரை 7 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையில் விசாரித்த போது மனித தவறுகள் தான் தெரிய வந்துள்ளது. பட்டாசு ஆலைகளில் சில விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசும், மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தி வரும் நிலையில் பலர் இதை அலட்சியம் செய்வதால் தான் விபத்துக்கள் ஏற்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் தான் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விதி இருந்தும் பல இடங்களில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாறாக மரத்தடியில் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கும் போது இது போல விதிமீறல்கள் இருந்தால் விபத்துக்கள் பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தும் இதுபோன்ற தவறுகளை சிலர் திருத்திக்கொள்ள முன்வரவில்லை. எனவே இனி வரும் காலத்தில் கடுமையான ஆய்வின் மூலம் விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர் விபத்துக்கள் குறித்து மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–

பல்வேறு சோதனைக்கு மத்தியில் பட்டாசு தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலை நம்பி பலலட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் போதிய பாதுகாப்பு இந்த தொழிலில் இல்லாமல் இருக்கிறது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை சிலர் கண்டு கொள்வதில்லை. அதனால் விபத்துக்கள்ஏற்படுகிறது.

 பட்டாசு ஆலைக்கு ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் ஆலை உரிமையாளர்களின் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். அதுபோன்ற நேரங்களில் அந்தஆலையில் உள்ள விதிமீறல்கள்மறைக்கப்படுகிறது. இது போன்ற விதிமீறல்கள் விபத்தில் முடிகிறது. இனி வரும் காலத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பட்டாசு ஆலையில் விதிமீறல்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பட்டாசு விபத்துக்களை குறைக்க மாவட்ட நிர்வாகமும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

Next Story