திருப்பூர் அருகே கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: கார் மீது லாரி மோதிய விபத்தில் அக்காள்-தங்கை பலி

திருப்பூர் அருகே கோவிலுக்கு சென்றபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் அக்காள்-தங்கை பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊத்துக்குளி,
திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). இவருடைய மனைவி சாந்தி(57). இவர்களுடைய மகன் ஈஸ்வரன்(32). நேற்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால் ஆறுமுகம் தனது குடும்பத்துடன் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். இவர்களுடன் சாந்தியின் சகோதரிகளான ராஜேஸ்வரி(65), பரிமளாதேவி(60) ஆகியோரும் சென்றனர். காரை ஈஸ்வரன் ஓட்டிச்சென்றார்.
மாலை 5 மணி அளவில் ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளியில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களின் காருக்கு பின்னால் கோவையில் இருந்து மேட்டூர் நோக்கி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக கனரக லாரி, காரின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 5 பேரையும் மீட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வழியிலேயே பரிமளாதேவி இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆறுமுகம், சாந்தி, ஈஸ்வரன் ஆகியோருக்கு மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி விட்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story