51 கிராம பஞ்சாயத்துகளில் 3,800 பேருக்கு தூய சமையல் எரிவாயு இணைப்பு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 51 கிராம பஞ்சாயத்துக்களில் தேர்வு செய்யப்படும் 3,800 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 51 கிராம பஞ்சாயத்துக்களில் தேர்வு செய்யப்படும் 3,800 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
எரிவாயு இணைப்பு
தூய்மைபாரத நாள் விழாவையொட்டி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவு, கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான குமார்ஜெயந்த் கலந்து கொண்டு 136 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது:–
3,800 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறையின் ஒருங்கிணைப்புடன் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும், கிராமங்களில் தூய்மையை பாதுகாக்கவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த 14–ந் தேதி முதல் அடுத்த மாதம்(மே) 5 வரை கிராம சுயராஜ் அபியான் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கிராம மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 51 பஞ்சாயத்துகளில் இருந்து தகுதியான 3 ஆயிரத்து 800 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இலவச எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எரிவாயு இணைப்பு பெறும் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வணிகம் மற்றும் தொழில் வர்த்தக அமைச்சகம் இணை இயக்குனர் அனிதா, பாரத் பெட்ரோலியம் நிறுவன பொது மேலாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் ராமானுஜ கர்மாக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story