குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் தொடர்ந்தது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி,
தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தால், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் 21-ந் தேதி (நேற்று), 22-ந்தேதி (இன்று) ஆகிய இரண்டு நாட்களும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றம் தொடங்கியது. கன்னியாகுமரி, குளச்சல், கொல்லங்கோடு, நீரோடி உள்பட மாவட்டம் முழுவதும் ராட்சத அலைகள் எழுந்து கரையில் மோதிய வண்ணம் இருந்தன. இதனால், கடற்கரையையொட்டிய பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக தங்களின் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். நேற்று முன்தினம் இரவு அலையின் வேகம் அதிகரித்து மீனவர்களை அச்சுறுத்தியது.
மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் தொடர்ந்தது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று காலை முதல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன. இதனால், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடி மகிழ்வது வழக்கம். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க ஆர்வம் காட்டினர். ஆனால், போலீசார் ரோந்து சென்று யாரையும் கடலுக்குள் இறங்க விடாமல் அப்புறப்படுத்தினர்.
குளச்சலில் நேற்று 2-வது நாளாக ராட்சத அலைகள் எழுந்த வண்ணம் இருந்தன. குளச்சல் கடலில் நீண்ட பாலம் உள்ளது. இது கடலுக்குள் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் தூண்கள் மிக உயரமாக அமைந்திருக்கும். ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் கடலுக்குள் இருக்கும் மணலை அலைகள் கரைக்கு இழுத்து வந்து திட்டுபோல் உருவாக்கும்.
தற்போது, ஏப்ரல் மாதத்திலேயே கடலுக்குள் இருக்கும் மணல் அலைகளால் இழுத்து வரப்பட்டு குளச்சல் துறைமுக பாலத்தின் தூண்களில் மணல் திட்டை உருவாக்கி உள்ளது. இதனால், பாலத்தின் தூண்கள் சிறியதாக காட்சி அளிக்கிறது.
நேற்று மாலை 5 மணி அளவில் குளச்சல் கடலில் ராட்சத அலை எழும்பி கடற்கரையை முழுமையாக தண்ணீர் ஆக்கிரமித்தது. பின்னர் அந்த தண்ணீர் கடலுக்குள் செல்லும் போது, கரையோரத்தில் நிறுத்தியிருந்த வள்ளங்களை இழுத்து சென்றது. அதில் ஒரு வள்ளம் பாலத்தில் மோதி சேதம் அடைந்தது.
இதுபற்றி அறிந்ததும், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் முத்துராமன், கடலோர போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதே போல் குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன் காலனி, கொட்டில்பாடு, மண்டைக்காடு புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ராட்சத அலைகள் அடிக்கடி எழும்பி வந்து கடற்கரைகளை தண்ணீர் ஆக்கிரமித்த படி இருந்தன.
கொட்டில்பாடு நவஜீவன்காலனி முன்புள்ள கடற்கரையில் ஜெபக்கூடம் உள்ளது. அதன் அருகே உள்ள வீட்டின் பின் பகுதி கடல் சீற்றத்தினால் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால், காயமின்றி தப்பினர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் அதன் அருகில் உள்ள தோட்டங்களிலும் கடல்நீர் புகுந்தது. மேலும் குறும்பனை பகுதியில் கட்டுமரங்களை கடற்கரையில் வைக்க முடியாமல் மேடான பகுதியில் மீனவர்கள் வைத்தனர்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் நேற்று காலையில் இருந்தே கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்த கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்தன. மாலை 5 மணிக்கு மேல் கடல் சீற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் மீனவர்கள் பீதியுடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து வள்ளவிளையில் கடற்கரையோரம் வசித்து வந்தவர்களில் 70 குடும்பங்கள் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சப்-கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் முகாமிட்டு, கடல் சீற்றத்தை கண்காணிப்பதுடன், மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்கள்.
தேங்காப்பட்டணம், இனயம், முள்ளூர்துறை பகுதியில் கடல் அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டது. கடலில் தோன்றிய ராட்சத அலைகள் மணலை அடித்து கரையில் சேர்த்த வண்ணம் இருந்தன. இதனால், தேங்காப்பட்டணம்- இனயம் சாலையில் அரையன்தோப்பு பகுதியில் சாலை முற்றிலுமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின.
கடல் சீற்றம் காரணமாக நேற்று கன்னியாகுமரி, குளச்சல், தேங்காப்பட்டணம், நீரோடி உள்பட மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்களது படகுகள், கட்டுமரங்கள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Related Tags :
Next Story