காஞ்சீபுரத்தில் திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை

காஞ்சீபுரத்தில் வயிற்று வலி தாங்காமல் திராவகம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் சி.வி.ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ஜெயமணி (வயது 34). இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயமணி, கழிவறையில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயமணி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
காஞ்சீபுரம் அடுத்த தேனம்பாக்கம் தாட்டித்தோப்பு முருகன் காலனியில் வசிப்பவர் பெருமாள் (45). பட்டு நெசவாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
பெருமாள் வயிற்று வலி தாங்காமல் தனது வீட்டில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார், பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பெருமாளுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story