ரூ.50 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு

கொட்டாரத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி,
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு பகுதியான கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முதல் சார்பதிவாளர் அலுவலகம் வரை உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும்-குழியுமாக காட்சி அளித்தது.
இதைத் தொடர்ந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் நீண்ட காலமாக கோரிக்்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முதல் சார்பதிவாளர் அலுவலகம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதனையடுத்து அங்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அவருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ், கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரேசன் உள்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story