மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிகட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு + "||" + Kancheepuram Ekambaranathar temple Rs 25 crore devotees accommodation

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிகட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிகட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்படுகிறது.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான லாலாதோட்டம் என்ற இடத்தில் 5 ஏக்கரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி (யாத்திரை நிவாஸ்) கட்டப்படுகிறது.

மத்திய-மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும் இந்த விடுதிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி செய்கிறது. 150 அறைகளுடன் நவீன முறையில் கட்டப்படும் இந்த விடுதியின் கட்டுமான பணிக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல தணிக்கை அதிகாரி சரோஜா, உதவி கோட்ட பொறியாளர் கல்யாணசுந்தரம், ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.