மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Suspicion in behavior: The worker who killed his wife's neck is also suicidal

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை
கடலூர் முதுநகரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி, தானும் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பெரியார்நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேல்முருகன் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி (32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக மாலதி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலதி வீட்டில் இருந்த போது, அங்கு கத்தியுடன் வந்த வேல்முருகன் அவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். பின்னர் கத்தியை எடுத்து மாலதி கழுத்தை அறுத்து விட்டார்.

பின்னர் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்த அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி மாலதி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்
தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இறந்து போன 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
2. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
3. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்
கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
4. கடனாக கொடுத்த ரூ.5 லட்சத்தை திரும்ப கேட்டதால் பைனான்சியரை அடித்துக் கொலை செய்தோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
கடனாக கொடுத்த பணம் ரூ.5 லட்சத்தை வட்டியுடன் திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பைனான்சியரை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
5. வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு
மூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் வந்து லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது தீக்குளிக்க போவதாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.