ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில், 22–ந் தேதி கடையடைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வருகிற 22–ந் தேதி கடையடைப்பு போராட்டம்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வருகிற 22–ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக, வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்து உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
முற்றுகை போராட்டம்தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, நகர வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் பா.விநாயகமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 22–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடையடைப்புஅன்றைய தினம், வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் நகர வணிகர்கள் அனைவரும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் வணிகர்கள் வருகிற 22–ந் தேதி கடையடைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.