பர்கூர் மலைப்பகுதியில் தனியார் பஸ்–சுற்றுலா வேன் மோதல்


பர்கூர் மலைப்பகுதியில் தனியார் பஸ்–சுற்றுலா வேன் மோதல்
x
தினத்தந்தி 20 May 2018 8:24 PM GMT (Updated: 20 May 2018 8:24 PM GMT)

பர்கூர் மலைப்பகுதியில் தனியார் பஸ்–சுற்றுலா வேன் மோதிய விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.

அந்தியூர்,

கர்நாடக மாநிலம் கர்காகண்டியில் இருந்து தனியார் பஸ் ஒன்று ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு நேற்று வந்துகொண்டு இருந்தது. பஸ்சை ராமசாமி என்பவர் ஓட்டினார். பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட தாமரைக்கரை பகுதியில் காலை 10.30 மணி அளவில் வந்தது. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேனும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. இந்த விபத்தில் பஸ் மற்றும் வேனில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 11.30 மணி அளவில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த விபத்தால் பர்கூர் மலைப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story