திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 21 May 2018 4:28 AM IST (Updated: 21 May 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது.

Next Story