பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்


பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்
x
தினத்தந்தி 22 May 2018 5:06 AM IST (Updated: 22 May 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

மும்பை, 

பா.ஜனதா எம்.பி. சிந்தாமன் வாங்கா உயிரிழந்ததை தொடர்ந்து காலியான பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர காவித் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

ராஜேந்திர காவித்துக்கு வாக்கு கேட்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இதுவரை 2 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மேலும் பல இடங்களில் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பால்கர் தொகுதியில் ராஜேந்திர காவித்துக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக டெல்லி நகர பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார். இதன்படி வருகிற 23-ந் தேதி வட இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் வசாய்-விரார் மற்றும் நாலச்சோப்ரா ஆகிய பகுதிகளில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story