பழனி தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழனி,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். நிர்வாகிகள் ஜெயராஜ், விஜயன், வருவாய்த்துறை மாவட்ட துணை தலைவர் மகாராஜன், மருத்துவ நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழக அரசு வெளியிட்ட ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story