கட்டண உயர்வை கண்டித்து 3-வது நாளாக பொன்மலை சந்தை வியாபாரிகள் இன்று போராட்டம்


கட்டண உயர்வை கண்டித்து 3-வது நாளாக பொன்மலை சந்தை வியாபாரிகள் இன்று போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:15 AM IST (Updated: 10 Jun 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கட்டண உயர்வை கண்டித்து பொன்மலை சந்தை வியாபாரிகள் 3-வது நாளாக இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதற்காக நேற்று இரவே ஏராளமானவர்கள் கூடி சமைத்து சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலை தினச்சந்தை மற்றும் வாரச்சந்தையில் கடைகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொன்மலை அனைத்து வியாபாரிகளும் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் இணைந்து போராடி வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொன்மலை சந்தையை சுற்றி அனைத்து கட்சிகளின் கொடிகளும் கட்டப்பட்டன. நேற்று 2-வது நாளாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலோசனை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக நடைபெறும் போராட்டத்துக்காக முன்கூட்டியே சில வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கினர். பொன்மலையை சுற்றியுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் முன்னதாகவே அங்கு வந்தனர். இன்று நடைபெறும் போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இரவில் 200-க்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கேயே வியாபாரிகள் சமைத்து சாப்பிட்டனர். வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கினர். திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். 

Next Story