தூங்க வைக்கும் திரைப்படம்
உலகிலேயே மிக மெதுவான திரைப்படம் ‘பா பா லேண்ட்’.
இந்த படம் 8 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம். இந்தப் படத்தில் வசனம் கிடையாது, கதை கிடையாது, மனிதர்கள் கிடையாது. நூற்றுக்கணக்கான ஆடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தைப் பார்த்தால் உடனே தூக்கம் வருவது உறுதி என்கிறார்கள். இன்று தூக்கமின்மை மிகப் பெரிய நோயாக மாறியிருக்கிறது. அந்தப் பிரச்சினையைச் சரி செய்வதற்காகவே இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம்.
‘‘இதைப் பார்க்க ஆரம்பித்தால் தூக்க மாத்திரைகள் தேவைப்படாது. நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினையும் சரியாகிவிடும். மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டுவிடலாம். இது திரைப்படமல்ல, மனதை ஒருங்கிணைக்கும் மருந்து” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் பீட்டர் ப்ரீட்மேன்.
Related Tags :
Next Story