உரண் கடற்கரையில் செத்து ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் எலும்புக்கூடு பிரித்து எடுப்பு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது
உரண் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் எலும்புக்கூடு பிரித்து எடுக்கப்பட்டது. இதனையடுத்து எழும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மும்பை,
உரண் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் எலும்புக்கூடு பிரித்து எடுக்கப்பட்டது. இதனையடுத்து எழும்புக்கூடு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராட்சத திமிங்கலம்
நவிமும்பை உரண் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலம் 43 அடி நீளம் கொண்டதாக இருந்தது.
உடற்கூறு ஆய்வுக்கு பின் அந்த திமிங்கலத்தின் எலும்புக்கூட்டை உடலில் இருந்து பிரித்து எடுத்து ஐரோலி கடல் உயிரின மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி திமிங்கலத்தின் சதையை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு இருந்தனர்.
எலும்புக்கூடு
எலும்புக்கூடு முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் சதை பகுதிகள் கடற்கரையில் புதைக்கப்பட்டன. திமிங்கலத்தின் எலும்புக்கூடு 32 அடி நீளம் கொண்டதாகவும், மண்டை ஓடு 8.2 அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது.
இதையடுத்து அந்த எலும்புக்கூடு கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு ஐரோலியில் உள்ள கடல் உயிரின மைய அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேதியியல் முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story