பெண்களுக்கான சுற்றுலா விடுதி

பின்லாந்தில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கு என்று பிரத்யேகமான சுற்றுலா விடுதி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரோத் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார். “ஆண்களின் தொந்தரவு இன்றி, தனியாக சில நாட்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே இந்த விடுதியை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. இது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்கள் சுதந்திரமாக இருப்பதற்கான விடுதி. ‘சூப்பர்ஷி’ தீவு 8.4 ஏக்கர் நிலப்பரப்புடையது. தீவைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உடனே விலைக்கு வாங்கினேன். விடுதி, ஸ்பா, சாகச விளையாட்டுகள், யோகா வகுப்புகள் போன்றவற்றை உருவாக்கினேன். ஆரோக்கியமான உணவுக்கும் ஏற்பாடு செய்தேன். ‘பெண்கள் இங்கே வந்து தங்கினால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். உங்களுக்காகவே ஆண்டு முழுவதும் சூப்பர்ஷி தீவு காத்திருக்கும்’ என்று விளம்பரம் செய்தேன். தற்போது என் தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்களே வந்து செல்கிறார்கள். ஜூலை மாதம் முதல் முறையாக ஆரம்பிக்க இருக்கிறோம்” என்கிறார் கிறிஸ்டினா ரோத்.
Related Tags :
Next Story