கடலூர் நகராட்சியில், மேலும் 58 இடங்களில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக ஆணையாளர் தகவல்

கடலூர் நகராட்சியில் மேலும் 58 இடங்களில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக ஆணையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,

கடலூர் நகராட்சி ஆணையாளர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் நகராட்சியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 3 பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒரு பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு விட்டது. வில்வநகர் பூங்காவுக்குள் செல்வதற்கு கூடுதலாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, மேலும் ஒரு வழி ஏற்படுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு விட்டது. எனவே அந்த பூங்காவும் இன்னும் 10 நாட்களுக்குள் திறக்கப்படும்.
இதுதவிர மேலும் 10 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பார்வையிட்டார். அனைத்து பூங்கா அமைக்கும் பணிகளும் தரமாக நடப்பதை உறுதி செய்து உள்ளோம்.
வசந்தராயன்பாளையத்தில் மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் தரம்பிரித்து, மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்காத குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு வழங்குகிறோம். இதுவரை 6 லாரிகளில் மக்காத குப்பைகளை அனுப்பி வைத்துள்ளோம். மேலும் 58 இடங்களில் மக்கும் குப்பைகளை சேகரித்து அங்கேயே தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 200 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடைகளில் எங்காவது அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வடிந்தால், 86102 67171 என்ற செல்போன் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதேப்போல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.
நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கி ரூ.13½ கோடியும், தண்ணீர் கட்டண பாக்கி ரூ.3 கோடியே 30 லட்சமும் உள்ளது. நகராட்சியில் 400 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்துக்காக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை சம்பளம் போடப்பட்டு உள்ளது. மே மாத சம்பள பாக்கி 1 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளது.
இவ்வாறு ஆணையாளர் சரவணன் கூறினார். அப்போது நகராட்சி மேலாளர் பழனி, பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story