மற்ற மாவட்டங்களுக்கு ஈடாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் அதிகப்படியாக உழைக்க வேண்டும்


மற்ற மாவட்டங்களுக்கு ஈடாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் அதிகப்படியாக உழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2018 9:45 PM GMT (Updated: 30 Jun 2018 7:07 PM GMT)

மற்ற மாவட்டங்களுக்கு ஈடாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் அதிகப்படியாக உழைக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

மற்ற மாவட்டங்களுக்கு ஈடாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் அதிகப்படியாக உழைக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியை அளித்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, 139 உயர்நிலைப்பள்ளி, 60 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016-17-ம் கல்வியாண்டை விட 2017-18-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலரின் உழைப்பும், பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் காரணமாகும்.

மற்ற மாவட்டங்களுக்கு ஈடாக பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் அதிகப்படியாக உழைக்க வேண்டும். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை கற்பிக்க, புதிய உத்திகளை கையாள வேண்டும்.

நன்றாக படிக்காத மாணவ-மாணவிகளிடம், ஆசிரியர்கள் நண்பர்கள் போல் பழகி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து நன்றாக படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடத்தை புரிந்து கொள்கிறார்களா? மாணவர்களுக்கு வாசிக்கும் திறமை உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்றவாறு பாடங்கள் நடத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை ஒவ்வொரு காலாண்டுக்கும் பெற்றோர்களை அழைத்து கலந்துரையாடல் மூலம் அடுத்த காலாண்டுக்குள் அவர்களை ஊக்குவிப்பது போன்று அரசு பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடத்திட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் சாம்பசிவம், அமுதா, வீரமணி, மணிவண்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story