மாவட்டம் முழுவதும் நுண்ணீர் பாசனத்துக்கு 4,250 ஹெக்டேர் இலக்கு; ரூ.35 கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 4 ஆயிரத்து 250 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்காலங்களை தவிர மற்ற நேரங்களில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக விடப்படுகிறது. எனவே, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிகளவு மகசூல் செய்யும் வகையில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் சொட்டுநீர், தெளிப்பு நீர், மழைத்தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த கருவிகள் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் 60 சதவீதம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். தண்ணீர் பாய்ச்சும் போது நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது.
மேலும், சொட்டு நீர் பாசனத்தில் உரங்களை கலந்தும் பாய்ச்சலாம். நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2018- 2019) வேளாண்மை துறை மூலம் 1,500 ஹெக்டேரும், தோட்டக்கலைத்துறை மூலம் 2 ஆயிரத்து 750 ஹெக்டேர் பரப்பிலும் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.35 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் நிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிகள் சான்று ஆகியவற்றை பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், வேளாண்மை துறை, வருவாய்த்துறை, நுண்ணீர் பாசன நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திட்டத்தில் இதுவரை பயனடையாத விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story