பூந்தமல்லி அருகே ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

பூந்தமல்லி அருகே ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச்சென்று விரட்டி பிடித்து கைது செய்தனர்
பூந்தமல்லி,
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ பந்தயத்தில் சிலர் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இதுபோல் பணம் வைத்து பந்தயத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போக்குவரத்து துணை கமிஷனர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சாம்சுந்தர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நெமிலிச்சேரியில் இருந்து குன்றத்தூர் நோக்கி வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 6 ஆட்டோக்கள் சீறிப்பாய்ந்தபடியும், அதற்கு முன்னால் மற்றும் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்தபடியும் வேகமாக வந்து கொண்டு இருந்தன.
ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இதை கண்டதும் ஆட்டோ பந்தயம் நடைபெறுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த நபர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.
போலீசாரை கண்டதும், ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறியபடி வாகனங்களில் வேகமாக சென்றனர். அவர்களை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார், 5 பேரை மட்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 ஆட்டோக்கள் மற்றும் 1 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ்(வயது 36), மாங்காட்டை சேர்ந்த மணிகண்டன்(30), சதீஷ்(35), பாடியை சேர்ந்த சங்கர்(33), பாஸ்கர்(29) என்பது தெரிந்தது.
மேலும் இவர்கள், இதுபோல் அடிக்கடி இந்த சாலையில் அதிகாலை நேரங்களில் ஒன்று திரண்டு 2 ஆட்டோக்களுக்கு இடையே பந்தயம் நடத்தி உள்ளனர். நெமிலிச்சேரியில் தொடங்கும் இந்த பந்தயம், குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் வரை செல்லும்.
அதேபோல் நேற்றும் 2 ஆட்டோக்களுக்கு இடையே பந்தயம் நடத்தி உள்ளனர். பந்தயத்தில் ஈடுபடும் 2 ஆட்டோக்களை கண்காணித்தபடியே அவர்களுக்கு பின்னால் மேலும் 4 ஆட்டோக்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்கள், பந்தய காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தபடி பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.
இதுபோல் பந்தயத்தில் ஈடுபடும் போது வேகமாக ஓட்டுவதற்கு வசதியாக அதிக திறன் கொண்ட என்ஜினை பொருத்தி, ஆட்டோவை பிரத்யேகமாக வடிவமைத்து உள்ளனர். சிலர் ஆட்டோவில் படுத்தபடியும், ஆட்டோவை ஒரு பக்கமாக தூக்கியபடி இரண்டு சக்கரத்திலும் சாகசம் செய்தபடி ஓட்டி வந்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த ஆட்டோ பந்தயம் நடத்த மூளையாக செயல்பட்ட சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த தங்கராஜ், புதுப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மற்றும் தப்பி ஓடிய இவர்களின் கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story