1½ வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொலை: ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

தளி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பன்னப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து விட்டனர்.
இதன் பிறகு ஆட்டோ டிரைவர் உதயகுமார் (வயது 25) என்பவரை அந்த இளம்பெண் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 23.8.2016 அன்று அந்த இளம்பெண்ணின் உறவினர் தளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக அந்த இளம்பெண் தளி சென்றார். இதற்காக தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை உதயகுமாரிடம் கொடுத்து விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் உதயகுமார் தனது மனைவிக்கு போன் செய்து குழந்தை தவறி கீழே விழுந்து அடிபட்டு விட்டது என்று கூறினார். இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டது. இதையடுத்து குழந்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், கட்டையால் தாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக தேன் கனிக்கோட்டை அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் காரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் உதயகுமார் சரண் அடைந்தார். குழந்தையை தான் பாலியல் பலாத்காரம் செய்து கட்டையால் அடித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை போலீசார், உதயகுமாரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார். இதைத் தொடர்ந்து உதயகுமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story