ஆர்.கே.பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டையில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அம்மையார்குப்பம் கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மட்டவளம் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். ராகவநாயுடு குப்பம் அருகே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 100 கிலோ ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
உடனே போலீசார் அரிசியுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசரெட்டி (வயது 34) என்பவரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story