குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திரண்ட மக்கள்


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 9 July 2018 10:15 PM GMT (Updated: 9 July 2018 7:32 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார் காளிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கடலாடி அருகே உள்ள ஒடைக்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அளி த்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் 150 வீடுகளில் 550 மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் தண்ணீர் சரியாக வருவதில்லை.

இதன்காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் கசியும் தண்ணீரை பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம். கடந்த 5–ந்தேதி இவ்வாறு தண்ணீர் பிடித்துவரும் போது 2 பெண்கள் விபத்தில் பலியாகி விட்டனர். பலியான 2 பெண்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவரின் குடும்பத்திற்கும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், குடிநீ ருக்காக அலைந்து திரிந்து வரும் எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் காலி கு டங்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் காவிரி குடிநீரை நம்பித்தான் உள்ளோம். ஆனால் காவிரி தண்ணீர் சரியாக வருவதில்லை. 10 நாட் களுக்கு ஒருமுறை மட்டும் சிறிதளவில் வருகிறது. இதன்காரணமாக நாங்கள் அனைவ ரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

எங்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். காவிரி தண்ணீர் முறையாக கிடைக்க செய்வதோடு, உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தார்.


Next Story