தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2018 3:30 AM IST (Updated: 14 July 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு பகுதி குழு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

பென்னாகரம்,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு பகுதி குழு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். நிர்வாகி சின்னமாது, மாவட்ட செயலாளர் கரூரான், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story