கிருஷ்ணகிரி அணையில் இருந்து 25-ந் தேதிக்குள் தண்ணீர் திறக்கா விட்டால் போராட்டம்


கிருஷ்ணகிரி அணையில் இருந்து 25-ந் தேதிக்குள் தண்ணீர் திறக்கா விட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2018 11:00 PM GMT (Updated: 16 July 2018 6:03 PM GMT)

கிருஷ்ணகிரி அணையில் இருந்து வருகிற 25-ந் தேதிக்குள் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பாணிப்பட்டியில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட துணை தலைவர் காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்திரகேசவன் வரவேற்று பேசினார்.

இதில், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், வட தமிழக பிரசார தலைவர் விஜய்காந்த், வட தமிழக சட்ட ஆலோசகர் சதாசிவன், மாவட்ட செயலாளர் தனபாலன், மாவட்ட மகளிர் அணி தலைவி மாயா, பர்கூர் ஒன்றிய தலைவர் திருப்பதி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஜெயவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், விவசாய கிணறுகள் மூலமாக நாற்று விடப்பட்ட நெல் நாற்றுகள் அனைத்தும் முற்றிவிட்டது. மீண்டும் விவசாயிகள் இரண்டாவது முறையாக நெல் நாற்றுகள் விட்டுள்ளனர்.

எனவே, வருகிற 25-ந் தேதிக்குள் அணையில் இருந்து தண்ணீர் திறக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் காவேரி நன்றி கூறினார்.

Next Story