பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை மானபங்கம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை மானபங்கம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை மானபங்கம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மாணவிகள் மானபங்கம்
மும்பை சயான் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2016-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மதிய உணவு இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிலர் அங்குள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தர்மேந்திரா(வயது27) என்ற வாலிபர் மாணவிகளை மானபங்கம் செய்துவிட்டு பள்ளி அறை ஒன்றில் பதுங்கி கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த 6 மாணவிகள் இதுகுறித்து பள்ளி ஆசிரியையிடம் கூறினர். இதையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
5 ஆண்டு ஜெயில்
இந்த சம்பவம் குறித்து போலீசார் தர்மேந்திரா மீது மானபங்க வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வாலிபருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பந்தாரே பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை மானபங்கம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story