தூத்துக்குடியில் வெளிநாட்டு சிகரெட் விற்ற துறைமுக ஊழியர் கைது

தூத்துக்குடியில் வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்ததாக வ.உ.சி.துறைமுக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்ததாக வ.உ.சி.துறைமுக ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 11 வெளிநாட்டு மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாட்டு சிகரெட்
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்
அப்போது, மேட்டுப்பட்டியை சேர்ந்த வ.உ.சி. துறைமுக ஊழியரான அப்துல்காதர் ஜெய்லானி(வயது 40) என்பவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள குடிசைக்குள் 400 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதே போன்று 11 வெளிநாட்டு மதுபாட்டில்களும் இருந்தன.
கைது
உடனடியாக போலீசார் அப்துல்காதர் ஜெய்லானியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு அருகே கஞ்சா, லாட்டரி சீட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் இருந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story