இந்திரா உணவகத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மதிய உணவு
இஸ்கான் கோவிலுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்திரா உணவகத்தில் மதிய உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, இஸ்கான் கோவில் நிர்வாகம் மூலம் மதிய உணவு தயாரித்து வழங்கப்பட்டு வந்தது. இதற்காக பெங்களூரு மாநகராட்சியும், இஸ்கான் கோவில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது துப்புரவு தொழிலாளர் ஒருவரின் மதிய உணவுக்கு ரூ.20-யை இஸ்கான் கோவில் நிர்வாகத்திற்கு பெங்களூரு மாநகராட்சி வழங்கி வந்தது.
ஆனால் தற்போது துப்புரவு தொழிலாளர் ஒருவருக்கு வழங்கும் உணவுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணத்தை ரூ.20-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மாநகராட்சியிடம் இஸ்கான் கோவில் நிர்வாகம் கேட்டு கோரிக்கை வைத்தது. இதனால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு இஸ்கான் சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவுக்கு பதிலாக இந்திரா உணவகத்தில் மதிய உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு இஸ்கான் மூலமாக மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் விலையை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்த வேண்டும் என்று இஸ்கான் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இஸ்கான் சார்பில் வழங்கப்பட்ட மதிய உணவு குறித்த பல்வேறு புகார்கள் வந்ததுடன், விலையையும் ரூ.25 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் துப்புரவு தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இஸ்கான் மற்றும் மாநகராட்சி இடையே இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதியில் இருந்து மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்திரா உணவகத்தில் இருந்து மதிய உணவு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

Related Tags :
Next Story