மோகனூர் வாய்க்காலில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

குமாரபாளையம், மோகனூர் வாய்க்காலில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
துரைசாமி:- தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், நடவுக்கு தேவையான நெல் விதைகளை அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல் அரசு புறம்போக்கு நிலங்களில் பனை விதைகளை நடவுசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தனியார் சேவை மையங்களில் சிட்டா எடுக்க ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் சேவை மையங்களில் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் சேவை மையங்களிலும் ரூ.10 மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்:- நெல்விதை அனைத்து விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேவை மைய கட்டணம் தொடர்பாக பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
கணேசன்:- ராஜாவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகியும் இதுவரை குமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்காலில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் ஆகாயதாமரை படர்ந்து இருப்பதாக கூறுகிறார்கள். எனவே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்:- திருச்செங்கோடு உதவி கலெக்டர் வாய்க்காலை ஆய்வுசெய்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.
சுந்தரம்:- மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை சேமிக்க காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். இதேபோல் கொல்லிமலையில் இருந்து ஏரிகளுக்கு வரும் வரட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. அவற்றை அகற்றி, வரட்டாற்றை தூர்வார வேண்டும். இதேபோல் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும்.
கலெக்டர்:- காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு திட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் ஒருமுறை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மெய்ஞானமூர்த்தி:- மேட்டூர் அணை உபரிநீரை ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பும் வகையில் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவேண்டும்.
கலெக்டர்:- பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story