குற்றால சாரல் விழாவில் ஆணழகன் போட்டியில் நெல்லை வீரர்கள் முதலிடம் பாவூர்சத்திரம் மாற்றுத்திறனாளி சாதனை

குற்றாலம் சாரல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் நெல்லை வீரர்கள் முதலிடம் பிடித்தனர்.
தென்காசி,
குற்றாலம் சாரல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் நெல்லை வீரர்கள் முதலிடம் பிடித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பாவூர்சத்திரம் வீரர் சாதனை படைத்தார்.
ஆணழகன் போட்டிகுற்றாலம் சாரல் விழாவின் 7–ம் நாளான நேற்று காலையில் ஆணழகன் போட்டி, அங்குள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது.
இதில், 50–60 கிலோ எடை பிரிவில் நெல்லையை சேர்ந்த பிரவீன்குமார் முதலிடத்தையும், ஹரிகிருஷ்ணன் 2–வது இடத்தையும், அப்துல் அஜிஸ் 3–வது இடத்தையும் பிடித்தனர்.
60–70 கிலோ எடை பிரிவில் நெல்லையை சேர்ந்த சுடலைமுத்து முதலிடத்தையும், விஷ்ணுகுமார் கோபால கிருஷ்ணன் 2–வது இடத்தையும், சேதுபதி 3–வது இடத்தையும் பெற்றனர். 70 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் நெல்லையை சேர்ந்த கல்லத்தியான் என்ற கண்ணன் முதலிடத்தையும், சும்பன் 2–வது இடத்தையும், காமேஷ் 3–வது இடத்தையும் பிடித்தனர்.
மாற்றுத்திறனாளி சாதனைமாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் பாவூர்சத்திரம் வாலிபர் வெற்றி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டி நடுவர்களாக இசக்கிமுத்து, கண்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பார்த்தசாரதி, உதவி கலெக்டர்(பயிற்சி) சுகபுத்ரா, கடையநல்லூர் தாசில்தார் திருப்பதி, குற்றாலம் நகர பஞ்சாயத்து செயல் அதிகாரி கனகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தென்காசி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர் நன்றி கூறினார்.