கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Aug 2018 5:15 AM IST (Updated: 4 Aug 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலி யுறுத்தி 7-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மும்பை, 

கோரிக்கைகளை வலி யுறுத்தி 7-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மராட்டிய அரசு அண்மைகாலமாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பயிர்க்கடன் தள்ளு படி கோரி விவசாயிகளும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்களும், இடஒதுக்கீடு வேண்டி மராத்தா சமுதாயத்தினரும் நடத்திய பெரிய அளவிலான போராட்டங்களை அடுத்தடு த்து எதிர்கொண்டது.

இந்தநிலையில், வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

கோரிக்கைகள்

7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி, காலியாக உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

Next Story