மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையம் அருகே நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது 4 பேர் உயிர் தப்பினர் + "||" + The van was blasted near the school in the middle of the school and 4 people survived

பள்ளிபாளையம் அருகே நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது 4 பேர் உயிர் தப்பினர்

பள்ளிபாளையம் அருகே நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்தது 4 பேர் உயிர் தப்பினர்
பள்ளிபாளையம் அருகே, நடுரோட்டில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த செட்டியார் கடை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 10 மணியளவில் அந்த வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அந்த வேனில் சென்ற 4 பேர் வேனை நிறுத்தி விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.

வேனில் வயரிங் கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.