மாவட்ட செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? + "||" + Female poison What is the cause of suicide?

பெண் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன?

பெண் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன?
புதுச்சத்திரம் அருகே பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி,புதுச்சத்திரம் அருகே உள்ள வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி மலர்விழி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது, விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மலர்விழியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மலர்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழி உடல்நலக் கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து சாவு - கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்தார். இதனால் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.
2. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
3. 8-வது மாடியில் இருந்து குதித்து முதுகலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை
8-வது மாடியில் இருந்து குதித்து முதுகலை பட்டப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தற்கொலை
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. திருமங்கலம் அருகே குடிசை வீட்டை அபகரித்ததாக உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்
திருமங்கலம் அருகே குடிசை வீட்டை அபகரித்ததாக உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.