திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் கைது

திருமணத்திற்கு வற்புறுத் தியதால் கள்ளக்காத லியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
திருமணத்திற்கு வற்புறுத் தியதால் கள்ளக்காத லியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணின் உடல் மீட்பு
பால்கர் மாவட்டம் மனோர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 3-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக மீட்கப் பட்ட பெண் பிவண்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியங்கா சாவந்த் (வயது31) என்பதும், மர்ம நபர் யாரோ அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை அங்கு வீசியதும் தெரியவந்தது.
மேலும் கொலை செய்யப் பட்ட பிரியங்கா சாவந்த், வாடா தாலுகாவை சேர்ந்த கணேஷ் (30) என்ற வாலிப ருடன் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து போலீசார் வாலிபர் கணேசை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்தான் பிரியங்கா சாவந்தை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
பிரியங்கா சாவந்திற்கும், கணேசுக்கும் கள்ளத் ெதாடர்பு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் பிரியங்கா சாவந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கணேசை வற்புறுத்தி உள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த கணேஷ், பிரியங்கா சாவந்தை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று பிரியங்கா சாவந்தை மனோர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கணேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story