போர்டபிள் சார்ஜர்

எவ்வளவு பெரிய போன் மாடலாக இருந்தாலும் சரி, அதிக விலை போன் என்றாலும் சரி... போன் பேட்டரியின் சார்ஜ் ஒருநாளுக்கு மேல் நீடிப்படிப்பதில்லை.
பெரும்பாலும் ‘பவர் பேங்க்’ எனப்படும் தற்காலிக பவர் சார்ஜரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இவை கனமாகவும், சற்றும் தடிமனாகவும் இருப்பதால், இதை சுமப்பது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மிகவும் லேசான போர்ட்டபிள் சார்ஜர்கள் வந்திருக்கின்றன. ‘பிங்கர்போ போர்டபிள் சார்ஜர்’ என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த சார்ஜர் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக அதேசமயம் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் பேசுவதற்கு உதவியாக உள்ளது. சிறிய யு.எஸ்.பி. போர்ட் போல அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சார்ஜரை இணைக்க வயர் தேவையில்லை. போனில் சொருகும் வகையில் இதில் ‘பின்’ உள்ளது. இந்த சார்ஜர் இடத்தை பெரிதும் அடைத்துக் கொள்ளாது. இதனால் போனுடன் பாக்கெட்டிலேயே இந்த சார்ஜரையும் வைத்து கொள்ளலாம்.
சார்ஜரில் பேட்டரி அளவு குறைந்துவிட்டால் அதற்குரிய சார்ஜரில் போட்டு அதை சார்ஜ் செய்யலாம். ஒரு சார்ஜிங் டிவைசில் நான்கு போன்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இதனால் பயணத்தின்போதும் இடையூறின்றி பேச முடியும்.
Related Tags :
Next Story