காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளாவுக்கு மேலும் ரூ.2 கோடி நிவாரண பொருட்கள் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலும் ரூ.2 கோடியே 5 ஆயிரத்து 842 மதிப்பில் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பல கட்டங்களாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி ரூ.1 கோடியே 84 லட்சத்து 35 ஆயிரத்து 867 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களும், நேற்று மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்பட்ட ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 975 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் கேரளாவின் பாலக்காடு நிவாரண முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேலும் ரூ.2 கோடியே 5 ஆயிரத்து 842 மதிப்பில் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story