வானவில் : டிஜிட்டல் கண்ணாடி

நமது வீடுகளில் பயன்படுத்தும் கண்ணாடி நமது முகத்தைக் காட்டும். உயர் தரக் கண்ணாடிகள் துல்லியமாக பளிச்சென தெரியும்.
மலிவு விலைக் கண்ணாடியாக இருந்தால் சில கோணங்களில் நமது முகத்தை பூதாகரமாகக் காட்டும். ஆனால் இது தொழில்நுட்ப உலகம். அதுவும் மின்னணு தொழில்நுட்ப உலகம். இத்துறையினர் உருவாக்கியதுதான் ‘டிஜிட்டல் கண்ணாடி’.
நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களும் இதில் ஒருங்கிணைங்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வசதிகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஹை-மிரர் பிளஸ் (Hi-Mirror Plus+) உங்களின் உண்மையான அழகை அப்படியே வெளிப்படுத்தும். இதில் நீங்கள் முகம் பார்க்கும்போது உங்கள் தோலின் நிலை அதாவது அது எண்ணெய் சருமமா அல்லது வறண்ட சருமமா, எந்தெந்த பகுதியில் சுருக்கங்கள் உள்ளன, எப்பகுதியில் கருப்பு புள்ளிகள் உள்ளன என்பன போன்ற விவரங்களையும் இது கண்முன் நிறுத்திவிடும். இதற்காகவே ‘அனலாசிஸ் என்ஜின்’ என்ற பகுதி உள்ளது. முகத்தில் எந்தெந்த பகுதிகளில் நீங்கள் கவனம் செலுத்தினால் உங்கள் அழகு மெருகேரும் என்பதை இது துல்லியமாக உணர்த்தும்.
இந்த கண்ணாடி வை-பை இணைப்பில் செயல்படுவதால் இதன் தகவல் தொகுப்பில் (பிக் டேட்டா) அனைத்து வகையான சருமங்கள் குறித்த விவரங்களும் இருக்கும். இதனால் சரும பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள், அது சார்ந்த பொருட்களையும் இது பரிந்துரைக்கும். அத்துடன் வழக்கமான முக பராமரிப்பு ஆலோசனைகளையும் (டிப்ஸ்) இது அளிக்கும். மேலும் ஆலோசனைகளை பின்பற்றத் தொடங்கிய பிறகு உங்கள் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு மாதமாக ஆலோசனைகளை பின்பற்றி இருக்கிறீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் முகம் எப்படி இருந்தது, தற்போது எப்படி மாறியிருக்கிறது என்ற விவரத்தையும், படத்தையும் அளிக்கும்.
இந்த கண்ணாடி, ஒரு வீட்டில் உள்ள ஆறு பேர் வரை பயன்படுத்த முடியும். ஒவ்வொருவரும் தங்களுக்கென பிரத்யேக கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவர் பற்றிய விவரம் அடுத்தவர்களுக்குத் தெரியாது. தனித்துவம் காக்கப்படும். இதில் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஐந்து விதமான வெளிச்சங்களை தேவைக்கு தகுந்தபடி வெளியிடும். வீட்டின் உட்புறம், அலுவலகம், பொது இடம், சூப்பர் மார்க்கெட், ஓட்டல் என தேவைக்கேற்ப விளக்கு ஒளியை இது உமிழும். பெண்கள் இதை கைப்பையிலேயே எடுத்துச் செல்ல முடியும். அந்தளவிற்கு சிறியது.
இதில் இசை கேட்கவும், பேஸ் புக் மூலம் நண்பர்களுடன் உரையாடவும், அழகுக் குறிப்பு ஆலோசகர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும் வழி உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் மூலம் தொடர்பு கொள்ளலாம். அமேசான் அலெக்சா மூலமும் இதை செயல்படுத்த முடியும்.

Related Tags :
Next Story