என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்


என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:31 AM IST (Updated: 31 Aug 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

`வீராம்பட்டினம் முகத்துவாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து தங்கள் விசைப்படகுகளை வீராம்பட்டினம் முகத்துவாரப்பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். முகத்துவாரப்பகுதியில் அடிக்கடி மணல்மேடு ஏற்படுவதால் விசைப்படகுகளை நிறுத்த முடியாமல் போவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் முகத்துவாரப்பகுதியை ஆழப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வீராம்பட்டினம் முகத்துவாரப்பகுதியில் தூண்டில் முள்வலைவில் கூடுதலாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும். புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக வீராம்பட்டினம் சுடுகாடு அருகே உள்ள பகுதியில் கடலை ஆழப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் தற்போது பெரிய அளவிலான டிரஜ்ஜர் கப்பல் உதவியுடன் வீராம்பட்டினம் முகத்துவாரப்பகுதியை ஆழப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகத்துவாரப்பகுதியை ஆழப்படுத்தினால்தான் விசைப்படகுகள் சிரமமின்றி செல்ல முடியும். ஆனால் அதற்கு பதிலாக முகத்துவார கரையில் இருக்கும் மணல் அள்ளும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பணியை கண்டித்து அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் வீராம்பட்டினம் முகத்துவாரப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மண்வெட்டியால் முகத்துவாரத்தை தூர்வாருவதுபோல் நூதனமாக போராட்டம் நடத்தினர்.

மேலும் மீனவர்களில் வாழ்வாதாரத்தை அழிக்காதே, முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story