கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் கர்நாடகத்தில் ‘சனாதன’ அமைப்புக்கு தடை விதிக்கப்படும்


கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் கர்நாடகத்தில் ‘சனாதன’ அமைப்புக்கு தடை விதிக்கப்படும்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:30 AM IST (Updated: 1 Sept 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், கர்நாடகத்தில் சனாதன அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், கர்நாடகத்தில் சனாதன அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

தடை விதிக்கப்படும்

துணை முதல்-மந்திரி பரமேஸ்வரை பெங்களூருவில் நேற்று கவுரி லங்கேஷ் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய ‘சனாதன‘ அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்னை சந்தித்து, ‘சனாதன‘ அமைப்புக்கு தடை விதிக்க கோரினர். கவுரி லங்கேஷ் கொலையில் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் கர்நாடகத்தில் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்படும். அதற்கு முன்பு விசாரணை நடத்தப்படும். கவுரி லங்கேஷ் கொலை குறித்து நடைபெற்று வரும் விசாரணையை சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி பாராட்டினார்.

வழக்கை வாபஸ் பெற...

கவுரி லங்கேஷ் கொலையாகி வருகிற 5-ந் தேதியுடன் ஓராண்டு ஆவதையொட்டி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரினர். அந்த கூட்டத்திற்கு போதிய அளவில் பாதுகாப்பு வழங்கப்படும். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையை இன்னும் வேகமாக நடத்தி முடிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்.

தேர்தலின்போது, மதவாத சக்திகள் வெற்றி பெறக்கூடாது என்று வலியுறுத்தி நடிகர் பிரகாஷ்ராஜ், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பிரசாரம் நடத்தினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலிப்பதாக உறுதி அளித்தேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story