மாவட்ட செய்திகள்

இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி + "||" + Certification Verification Task with e-Service Center

இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, 


கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. மையத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்களது சான்றிதழ்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ-சேவை மையம் மூலமாக சரிபார்த்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் பணியானது கடந்த 30-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்து சரிபார்க்கலாம்.
தற்போது வரை 170 விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்ற விண்ணப்ப தாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வருகிற 18-ந்தேதிக்குள் அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
2. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வழக்கு: சிவகங்கை கலெக்டர், ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு விசாரணைக்காக சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
3. இனிப்பு பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் - கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம்பெற வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
4. மாற்றுத்திறனாளி பெண்கள் 3 சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளி பெண்கள் உயர்த்தப்பட்ட மானியத்துடன் 3 சக்கர வாகனம் பெற 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
5. கண்மாய், ஊருணி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக கண்மாய், ஊருணி மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.