மாவட்ட செய்திகள்

வானவில் : டோஸ்டராய்ட் + "||" + Vanavil : Tostarayt

வானவில் : டோஸ்டராய்ட்

வானவில் : டோஸ்டராய்ட்
காபியில் முகம் வரைந்து கொடுக்கும் டெக்னாலஜி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இன்றைய அவசரயுகத்தில் பெரும்பாலானவர்களின் காலை உணவாக மாறிவிட்ட பிரெட்டிலும் நமக்கு விரும்பிய எழுத்துக்களையோ, படங்களையோ அச்சிட்டு டோஸ்ட் செய்து தருகிறது இந்த டோஸ்டராய்ட் (Toasteriod ) கருவி. ஆப் மூலம் இயங்கக்கூடிய இதைக் கொண்டு அழகான படங்களை வரைந்தோ அல்லது வாசகங்களை அச்சிட்டோ பொன்னிறமாக டோஸ்ட் செய்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.


சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட பிரெட்டில் இருக்கும் உருவங்களையும், படங்களையும் பார்த்து சாப்பிடுவதில் ஆர்வம் கொள்ளவைக்கும். நன்றி, பிறந்தநாள் வாழ்த்து போன்ற செய்திகளை, நாம் வெளியூரில் இருந்தாலும் இந்த டோஸ்டருக்கு மொபைல் ஆப் மூலம் அனுப்பி நம் அன்பானவர்களின் காலை உணவை ஸ்பெஷல் ஆக்க முடியும். யார் அனுப்பியது என்ற விவரத்துடன் கூடிய செய்தி நமது செல்போனுக்கு வந்துவிடும்.

அன்றைய வானிலையை கூட நமது பிரெட்டில் டோஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம். ‘மைக்ரோ பிலமென்ட் டெக்னாலஜி’ மூலம் இது செயல்படுகிறது. வேண்டிய பட்டனை அழுத்தி பிரெட் துண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன்களில் இருந்து தேர்ந்தெடுத்து டோஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது ஆப் மூலம் நாம் விரும்பிய படங்களின் வாழ்த்து செய்திகளை சேர்த்து பிரெட்டில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

சாதாரண காலை உணவைக்கூட ரசனையோடு வழங்கிட வகை செய்கிறது இந்த டோஸ்டராய்ட். 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்
வித்தியாசமாக, மற்றவர்களைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக தனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் கவனமாக உள்ளது.
2. வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்
கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கேற்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
3. வானவில் : நவீன தோட்டக்காரன்
இப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.
4. வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் 4 கேமராக்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்
பொதுவாக ஏர் கண்டிஷனர் வாங்குவது என்ற உடனேயே அதை எங்கே பொறுத்துவது என்ற பிரச்சினை எழும்.