எழும்பூரில் பெண் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை எழும்பூரில் உள்ள ரெயில்வே திருமண மண்டபத்தில் ரெயில்வே பெண் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் பெண் ரெயில்வே போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ரோகித் நாதன் ராஜகோபால் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சென்னை, கோவை, சேலம் கோட்டைத்தை சேர்ந்த பெண் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரின் பெண் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் பெண் போலீசாருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சை தேவைபடும் போலீசாருக்கு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story