சத்திரம் பஸ்நிலையம்: டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயன்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு

சத்திரம் பஸ்நிலையம் அருகே அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயன்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மலைக்கோட்டை,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி யாகும். இங்குள்ள வெனீஸ்தெருவில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கடை அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்தில் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் கோர்ட்டு உத்தரவை பெற்றது. இதற்காக பழைய கடையை சுத்தம் செய்து திறக்க ஏற்பாடு செய்து இருந்தனர். இது பற்றி அறிந்த பொதுமக்கள் கடையை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையை முற்றுகையிட வந்தனர்.
தகவல் அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி கடையை திறக்க இருக்கிறார்கள். இந்த பகுதியில் கடை வேண்டாம் என்றால் கலெக்டரிடம் முறையிட்டு உத்தரவு பெற்று வாருங்கள். அதுவரை தேவையில்லாத பிரச்சினை செய்யக்கூடாது என்று போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் இது பற்றி மனு அளிக்க உள்ளதாக கூறி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story