அறிவுசார் சொத்து உரிமையை பாதுகாக்க புதிய திட்டம் : முதல்-மந்திரி பேச்சு


அறிவுசார் சொத்து உரிமையை பாதுகாக்க புதிய திட்டம் : முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2018 12:21 AM GMT (Updated: 5 Oct 2018 12:21 AM GMT)

அறிவுசார் சொத்து உரிமையை பாதுகாக்க புதிய திட்டம் தொடங்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

ஆசிய தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழா பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெலகாவி, தாவணகெரே, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, சிவமொக்கா, துமகூரு ஆகிய நகரங்களை மத்திய அரசு ‘ஸ்மார்ட் சிட்டி’ (சீர்மிகு நகரம்) திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

தைவான் நிறுவனங்கள் வெளிக்காட்டியுள்ள தொழில்நுட்பங்கள், நகரங்களை மேம்படுத்த உதவும். தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் கர்நாடகத்தில் தான் அதிகமாக உள்ளன.

அறிவுசார் சொத்து உரிமையை பாதுகாக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும். தைவான் நாடு பெங்களூருவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வை கண்டறிய வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க வேண்டியது அவசியம். பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களில் நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை மாநில அரசு திறந்த மனதுடன் வரவேற்கிறது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story